டெஹ்ரான், ஆக. 10- ஈரான் தலைநகா் டெஹ்ரானில் செய்தியா ளா்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி கூறுகையில், ‘ஈரான்-அமெரிக்கா இடையே கையொப்பமான புரிந்துணா்வு அமைதி ஒப்பந்த விதிகள் மீறப் படுவது நிறுத்தப்படும் வரை, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மாட்டோம். ஓமனுடன் ஹோர்முஸ் நீரிணையில் புதிய கடல்வழிப் போக்குவரத்து பாதைகளை ஏற்படுத்துவது குறித்து நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இதை ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப் பட இருக்கிறது என்று அா்த்தம் கொள்ளக் கூடாது. கப்பல் போக்குவ ரத்து பாதைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்படலாம். ஆனால், நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்துக்குத் திறப்பது என்பது பிற நிபந்தனைகள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்தே இருக்கும். இதை சமரசம் செய்பவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்திவிட்டோம்’ என்றார்.
ஈரான் புதிய நிபந்தனை
ஈரானில் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய அமைப்பாக கருதப்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தரப்பில், அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்தி கொள்ளாதவரை ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப் படாது எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் செயலரும், புரட்சிகர பாதுகாப்புப் படையின் கமாண் டருமான முகம்மது பாஹா் ஜோல்காதா் கூறுகையில், ‘ஈரானை அமெரிக்கா மீண்டும் மிரட்டக் கூடாது. ஈரான் மற்றும் மேற்காசிய பகுதியில் உள்ள ஈரானின் கூட்டாளிகளுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
இந்த பகுதியில் உள்ள அமெரிக்க படை களைத் திரும்பப் பெற வேண்டும். போரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு அளிக்க வேண்டும். பொரு ளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். ஈரான் சொத்துகள் மீதான முடக்கத்தை நிபந்தனை யின்றி நீக்க வேண்டும்’ என்றார்.
இந்நிலையில், ஈரான் போர் காரணமாக அமெ ரிக்கா இருப்பு வைத்திருந்த ஆயுத தளவாடங்கள் குறைந்து விட்டதாகவும், இதையடுத்து, ஆயுத உற்பத்தியை அதிகரிக் கும்படி ஆயுத தள வாட உற்பத்தி நிறுவனங் களை அமெரிக்க அரசு அறிவுறுத்தியிருப்பதா கவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஈரான், அமெரிக்கா இடையே கடந்த ஜூன் மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்ப மானது. எனினும், இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. மறுபக்கம் ஈரானும், அமெரிக்காவும் சமரசவாதிகள் மூலம் பேச்சுவார்த்தைக்கான முயற்சியையும் எடுத்து வருகின்றன என்பது குறிப் பிடத்தக்கது.
இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அமல்படுத்தாதவரை அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்று ஈரான் நேற்று (9.8.2026) உறுதிபடத் தெரிவித்தது.
