வெள்ளைக்காரனது ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் அவனுக்கு வால் பிடித்து அவனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, அவன் புகழ்பாடி உத்தியோகங்கள், அதிகச் சம்பளம், அதிகப் பதவி, அந்தஸ்து பட்டங்கள் எல்லாம் பெற்று வந்தனர். எந்தக் கட்டத்தில் அவனால் தங்களுக்கும், தங்கள் உயர் ஜாதித் தத்துவத்திற்கும், சுயநல வாழ்விற்கும் கேடு ஏற்படுமென்று எண்ணினார்களோ அன்று முதல் அவனை வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர். இது உலகறிந்த உண்மையாகும். இதில் சந்தேகம் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
