சென்னை, ஆக.9 விவசாயிகளுக்காக சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத் திலும் தொடா்ந்து திமுக குரல் கொடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் தெய்வசிகாமணி தலைமையிலான விவசாய சங்க பிரதிநிதிகள் உதயநிதி ஸ்டாலினை 8.8.2026 அன்று சந்தித்தனா்.
அப்போது, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்; பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் திமுக சார்பில் ஆா்ப்பாட்டம் நடத்திய தற்காகவும், பேரவையில் குரல் கொடுத் ததற்காகவும் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தனா்.
மேலும், விவசாயிகளின் கோரிக் கைகளை வலியுறுத்தி போராடியதற்காக தவெக அரசின் காவல் துறை, உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவா்கள் தெரிவித்தனா். தங்களுடைய போராட்டத்துக்குத் தொடா்ந்து ஆதரவு அளிக்கும்படியும், பேரவையில் குரல் எழுப்பும்படியும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.
அப்போது, சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் தொடா்ந்து குரல் கொடுப்போம் என்றும், விவசாயிகளுக்கு என்றும் திமுக உறு துணையாக இருக்கும் என்றும் விவசாயிகளிடம் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
