திருத்தணி, ஆக. 9- ஆடி கிருத்திகை என்பதை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயி லுக்குப் அதிக மானவர்கள் வருகை தந்த நிலையில், பக்தர்களின் உடல் நலனைக் காக்கும் பொருட்டு உணவு பாது காப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் காலா வதியான, செயற்கை நிறமிகள் கலக்கப்பட்ட ஆபத்தான உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில் 18 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 5 சிறப்பு குழுக்கள் அமைக் கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சன்னதி தெரு, மலைக்கோயில், அரக்கோணம் சாலை, எம்பிஎஸ் சாலை, திருப்பதி சாலை, சித்தூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
திருவிழா காலங்களில் வரும் மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி, அதிக லாபம் ஈட்டும் நோக்கில் சில வியாபாரிகள் தரமற்ற மற்றும் ஆபத்தான உணவுகளை விற்பனை செய்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நிறமிகள் கலக்கப்பட்ட பலகாரங்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடன டியாக அழிக்கப்பட்டன.
சந்தேகத்திற்கு இட மான 71 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரி சோதனைக்காக அரசு அங்கீ காரம் பெற்ற ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை முடிவில் பல உணவுகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய தரமற்ற, ரசாயனம் கலந்த உணவுகளை உண்பதால்: உணவுக்குழாய் புற்று நோய். கல்லீரல் அழற்சி. கடுமையான வயிற்றுப் போக்கு. தீவிர வாயுப் பிரச்சினை ஆகியவை ஏற்படுவதுடன், முதியவர் களுக்கு மரணம் கூட சம்பவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு அதி காரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
வியாபாரிகளின் சட்டவிரோத லாப வெறியைக் கட்டுப்படுத்த அபராதம் விதிக்கப்பட்ட அதே வேளையில், திருவிழா காலத்தில் பக்தர்களுக்கு உணவுக்கொடை வழங்கும் வணிகர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புக ளுக்குத் தரமான உணவை வழங்குவது குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன.
பக்தர்களின் நம்பிக்கை யையும் ஆரோக்கியத்தையும் சுரண்டி லாபம் பார்க்க நினைக்கும் வியாபாரிகள் மீது தொடர் கடும் நடவடிக் கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. பக்தி என்ற பெயரில் கோவில்கள் மூலம் நடக்கும் கொள்ளைகளின் வகைகளில் இதுவும் ஒன்று இவர்களுக்கு கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவு பொருட்களை உண்பதால் வாடிக்கையாளர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்று தெரிந்தும் இவர்கள் லாபம் பார்க்கவே இப்பொருளை விற்கின்றனர்.
