புதுகை, ஆக.6 புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடியில் வீரலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடி வாங்கியும் நூதன வழிபாடு செய்துள்ளனர்.
நேர்த்திக்கடன் செலுத்தும் வித மாக, கோயில் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்ட பக்தர்களின் தலையில் கோயில் பூசாரி தேங்காய் உடைத்தார். தொடர்ந்து, தங்களை விட்டு பேய், பில்லி சூனியம் உள்ளிட்டவை நீங்கி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காகப் பூசாரியிடம் பக்தர்கள் சாட்டை அடியும் பெற்றுக் கொண்டனர். இந்த வினோத வழிபாட்டின் போது பக்தர்களுக்கு இதுவரை காயமும் ஏற்பட்டதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
