பிரான்சு தலைமையிலான 6ஆம் தலைமுறை போர் விமானத் திட்டத்தில் இணைய இந்தியா தீவிர முயற்சி!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பிரான்சு, ஆக. 9- இந்தியப் பாதுகாப்புத் துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரான்சு அரசு முன்னெடுக்கும் 6-ஆம் தலைமுறை போர் விமானக் கூட்டு உருவாக்கத் திட்டமான ‘Future Combat Air System’ (FCAS) திட்டத்தில் இணைவதற்கு இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஒன்றிய பாதுகாப்பு
அமைச்சகம் தகவல்

நாடாளுமன்றப் பாதுகாப்புச் நிலைக்குழுவிடம் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில், பிரான்சு தலைமையிலான 6-ஆம் தலைமுறை போர் விமானத் திட்டத்தில் இணைவதற்கான செயல்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 4.5 தலைமுறை போர் விமானங்கள் (ரஃபேல், தேஜாஸ் போன்றவை) பயன்பாட்டில் உள்ளன.

உள்நாட்டிலேயே 5-ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் ‘AMCA’ திட்டம் தயாரிப்பு நிலையில் உள்ள நிலையில், பன்னாட்டு நாடுகளுடன் இணைந்து 6-ஆம் தலைமுறை தொழில்நுட்பத்தில் தடம் பதிப்பது நாட்டின் வான்வழிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்.

6-ஆம் தலைமுறை போர் விமானங்கள் வெறும் மனிதரால் இயக்கும் விமானமாக மட்டும் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI), ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் கிளவுட் தகவல்தொடர்பு பிணையம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படும்.

காலக்கெடு

நவீன போர்மறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்திய விமானப்படை இத்தகைய தொழில்நுட்பங்களில் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, புதிய 6-ஆம் தலைமுறை போர் விமானங்களை கையகப்படுத்துவதற்கான தெளிவான வரைபடம் மற்றும் காலக்கெடுவை வரையறுக்குமாறு நாடாளுமன்றக் குழு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பன்னாட்டு அளவிலான உயர் தொழில்நுட்ப கூட்டுத் திட்டங்களில் பங்கெடுப்பது, ‘ஆத்மநிர்பார் பாரத்’ கொள்கையின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்புத் திறனையும், தொழில்நுட்பப் பகிர்வையும் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *