ஜார்க்கண்ட் போராட்டம் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் மீது மை வீசித் தாக்குதல்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ராஞ்சி, ஆக.9- ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா மீது மை வீச்சு தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜார்க்கண்ட் சட்டப் பேரவையை நோக்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி பேரணி செல்லத் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில மாணவர் அமைப்பு தெரிவித் துள்ளது.

கடந்த சில நாள்களாக ராஞ்சி நகரில் பெய்துவரும் கனமழையும் பொருள்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராடி வரும் நிலையில், அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினரும் அவர்களுக்கு ஆதரவாகப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் 14ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ஆறு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜார்க்கண்ட் அரசுடனான எந்தப் பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி அமைப்பு களான அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி  பிர்சா சவுக் அருகே பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் நேஹா போரா மீது மை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மை வீசித் தாக்குதல் நடத்தியவர் பாஜகவைச் சேர்ந்த என்று அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *