தமிழ்நாடு, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கும் சிறுநீரக நோய் நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.9- தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புற மக்கள், விவசாயிகள் மற்றும் கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் இடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) வேகமாக அதிகரித்து வருவது குறித்து நாடாளு மன்றக் குழு எச்சரித்துள்ளது.

இந்நோய் குறித்து விரிவாக ஆராயவும், தீவிரக் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கவும் ஒன்றிய அரசுக்கு அக்குழு பரிந்துரைத்துள்ளது.

சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் ராம் கோபால் தலைமையிலான சுகா தாரத்துக்கான நாடாளு மன்ற நிலைக்குழு சமர்ப் பித்துள்ள அறிக்கையில் ,தமிழ்நாடு,  கருநாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா, மகாராட்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுட்டிக ்காட்டப்பட்டுள் ளது. இந்தியாவில் சுமார் 15 மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய்களுக்குப் பொதுவாக நீரிழிவு (31 சதவீதம்) மற்றும் உயர் குருதிஅழுத்தம் (13%) ஆகியவையே முக் கியக் காரணங்களாக இருக் கின்றன. ஆனால், இந்நோய் எந்தவொரு முந்தைய உடல்நலப் பாதிப்பும் இல்லாத குறைந்த வருவாய் கொண்ட இளம் விவசாயத் தொழிலாளர்களை (16 சதவீதம்) அதிகம் தாக்குகிறது.

அதிக வெப்பம், தொடர் நீர்ச்சத்து குறை பாடு, பூச்சிக்கொல்லி மருந்துகள், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் கன உலோகங்களின் தாக்கம் ஆகியவை இதற்குக் கார ணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பருவநிலை மாற்றத்திற்கும் இதற்கும் இடையிலான தொடர்பையும் ஆராய வேண்டும் என நாடாளு மன்றக் குழு வலியுறுத்தி யுள்ளது. இந்தியாவில் சில கிராமப்புறப் பகுதிகளில் 18 முதல் 20 சதவீத மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். இதைக் கட் டுப்படுத்த மாவட்ட அளவிலான கண்கா ணிப்பு, வேலை செய் யும் இடங்களில் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங் குதல் மற்றும் அதிக வெப்பத்தில் பணியாற் றுபவர்களுக்கு இடை வேளை அளித்தல் போன்ற நடவடிக்கைக ளுடன் கூடிய தேசிய தடுப்பு மற்றும் கண்காணிப்பு வழிகாட் டுதலை உருவாக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *