இந்நாள் – அந்நாள்

1 Min Read

‘‘பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை குழந்தைகள் விடுதிக்கு திருச்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இன்று’’ (9.8.1967)

தந்தை பெரியார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததுடன் அரசினர் மேலும் ஒன்றே கால் லட்சம் போட்டு இரண்டரை லட்ச ரூபாய் செலவில் மேற்கண்ட குழந்தைகள் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா புத்தூர் தலைமை மருத்துவமனைத் திடலில்  9.8.1967 அன்று நடைபெற்றது. முதலமைச்சர் அண்ணா அவர்கள் அடிக்கல் நாட்டினார். விழாவில் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் கலந்து கொண்டார்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள், மருத்துவ இயக்குநர்கள், மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தேசிய புத்தக ஆர்வலர்கள் நாள் இன்று  (ஆகஸ்ட் 9, 2026)

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று தேசிய புத்தக ஆர்வலர்கள் நாள்  கொண்டாடப்படுகிறது. இது வாசிப்பின் மகிழ்ச்சியை சிறப்பிக்கும் வகையிலும் ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்வாகும். இது, புத்தகங்கள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தையும், வெறும் பொழுதுபோக்கைத் தாண்டிய அவற்றின் எண்ணற்ற நன்மைகளையும் எடுத்துக்காட்டுகிறது. வாசிப்பு என்பது எல்லா வயதினருக்கும் ஒரு மதிப்புமிக்க செயலாகும். இது மன அழுத்தத்தைப் போக்குவதோடு, அறிவாற்றல் திறன்களையும் சொல்லறிவையும் மேம்படுத்துகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *