இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் மேல்முறையீட்டு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.8- இஸ்லாத்திற்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்.சமீர் அகமது (முன்பு என்.பரமசிவம்). இந்து பெற்றோருக்கு பிறந்த இவர், இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இந்நிலையில் அவர் ‘முஸ்லிம் லெப்பை’ பிரிவின் கீழ் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் கயத்தார் வட்டாட்சியர் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார். இதனால் அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2022-இல் மனு தாக்கல் செய்தார். ‘முஸ்லிம் லெப்பை’ என குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறு மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனிடையே, 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியலினத்தவர் ஆகிய பிரிவுகளில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீடு பலன்களை பெறுவதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிமாக கருதப்படலாம் என்றும், அவ்வாறு மதம் மாறும்போது, அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த அரசாணையின் அடிப் படையில், தனக்கு பிற்படுத்தப் பட்டோர் முஸ்லீம் சான்றிதழ் வழங்க உத்தர விடுமாறு சமீர் அகமது நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை 2024 ஆம் ஆண்டு பிறப் பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, சிறீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு நேற்று (7.8.2026) விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி, சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜரா னார்கள். அப்போது முகுல் ரோஹத்கி, “ஒரு நபர் தனது மதத்தை மாற்றி கொண்டாலும், அவர் பிறப்பால் எதிர்கொண்ட சமூகப் புறக்கணிப்பும், கல்விரீதியிலான பின்தங்கிய நிலையும் சமுதாயத்தில் உடனடியாக மாறிவிடுவதில்லை. அவர்கள் தொடர்ந்து பின் தங்கியே இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே இந்த அரசாணை கொண்டு வரப்பட்டது” என்று வாதிட்டார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான மாநில சட்டரீதியான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இது கொள்கை முடிவாக எடுக்கப்பட்டது என்றும், இதில் உயர் நீதிமன்றம் தலையிட்டது தவறு என்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *