காங்கிரஸிடம் பெரிய தோல்வி: கூண்டோடு கலைக்கப்பட்ட பா.ஜ.க. தோல்வி விரக்தியில் பா.ஜ.க. தலைமை பதற்றம்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ததியா, ஆக. 7- மத்தியப் பிர தேசத்தின் ததியா (Datia) சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக, காங்கிர ஸிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாவட்ட பாஜக அமைப்பு கூண்டோடு கலைக்கப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸும் குஜராத்தில் பாஜகவும் வெற்றிபெற்ற நிலையில், பீகாரில் பிரபல தேர்தல் வியூக வல்லுநருரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ததியா மாவட்ட அமைப்பைக் கலைத்து பாஜக மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது. ததியா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கன்சியாம் சிங்கிடம், பாஜக வேட்பாளர் அசுதோஷ் திவாரி 6,016 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பாஜகவின் பலமான கோட்டையாகக் கருதப்பட்ட இத்தொகுதியில் கிடைத்த தோல்வி கட்சித் தலைமைக்கு பலத்த பின்ன டைவை ஏற்படுத்தியது. இதனைடுத்து முதல்வர் மோகன் தலைமையில் போபாலில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, தோல்விக்கான காரணங்களை ஆராய இரு நபர் குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் விசாரணையில், முன்னாள் உள்துறை அமைச்சரும் மூத்த தலைவருமான நரோத்தம் மிஸ்ராவுக்கு சீட் மறுக்கப்பட்டு, அசுதோஷ் திவாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே ஆதரவாளர் களிடையே கடும் எதிர்ப்பு கிளம் பியதாகவும், தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராக உள்ளூர் நிர்வாகிகள் சிலர் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே, ததியா மாவட்டத் தலைவர் மற்றும் அனைத்துக் குழுக்களும் உடனடியாகக் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மாநில அலுவலகச் செயலாளர் ஷியாம் மகாஜன் வெளியிட்ட உத்தரவின்படி, ததியா மாவட்ட பாஜக தலைவர் ரகுவீர் சிங் குஷ்வா உட்பட மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, மண்டலக் குழுக்கள், அணிகள் மற்றும் அனைத்துத் துணை அமைப்புகளும் உடனடியாகப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு அமைப்புக் கலைக்கப் பட்டுள்ளது. தற்போது அமைப்பு கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நிர்வாகிகளை நியமிக்க மாநிலத் தலைமை முடிவு செய்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *