18-ஆம் நூற்றாண்டு ஹோல்கர் காலம் முதல் இன்றைய நொய்டா வரை சாக்கடை நீரைக் குடிக்கும் அவலம் தொடர்வது ஏன்?

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரை ஆட்சி செய்த ஹோல்கர் வம்ச காலத்தில், ஜாதியத் தீண்டாமையும், சமூக அடக்குமுறைகளும் அதன் உச்சத்தில் இருந்ததாக ஆங்கிலேய நில அளவையாளரும் வரலாற்று அறிஞருமான ஜான் மெக் வல்ட்ரே எழுதிய பதிவுகள் இன்றும் கொல்கத்தா மற்றும் பிரிட்டன் நூலகங்களில் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன.

அவரது வரலாற்றுப் பதிவு களின்படி, 1700 முதல் 1850 வரையிலான காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் உரிமை மறுக்கப்பட்டது. உயர் ஜாதியினரின் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கும் குழிகளுக்கு அருகே பள்ளம் தோண்டி, அதில் ஊறும் சாக் கடை கலந்த நீரைத்தான் அம்மக்கள் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்த வேண்டிய அவலநிலை இருந்தது. ஊர் குளங்களிலோ, கிணறுகளிலோ அவர்கள் நீர் எடுக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் வனப்பகுதிகளுக்குச் சென்று பன்றிகளும் எருமைகளும் உருளும் குட்டைகளில்தான் அவர்கள் குளித்து வந்தனர்.

பின்னர், பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களுடன் இந்தூர் சமஸ்தானம் ஒப்பந்தங்களை மேற்கொண்டபோது, மக்கள் பிரிட்டிஷ் நிர்வாகப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். காலப்போக்கில் இந்நிலை மாறியதாகக் கருதப்பட் டாலும், விடுதலைக்குப் பிறகும் பல இடங்களில் வெவ்வேறு வடிவங் களில் இக்கொடுமை நீடித்து வந்தது.

80 ஆண்டுகளுக்குப் பின் மீண்டுவரும் கொடூரம்

ஹோல்கர் வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து 80 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்த வரலாற்றுச் சுவடுகளின் கொடூரம் இன்று மீண்டும் நவீன இந்தியாவில் உயிர்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிக நவீன மற்றும் தொழில்வளர்ச்சி பெற்ற நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் நொய்டா செக்டர்-78-ல் உள்ள வால்மீகி நகரில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மின்சாரமும் குடிநீரும் இன்றி மக்கள் அடிப்படை வசதிகளுக்காகப் போராடி வருகின்றனர்.

நவீன நகரின் நிழலில்
ஓர் அவலம்

மும்பைக்கு அடுத்தபடியாக அதிக முதலீடுகளையும் 50, 60 மாடிகளைக் கொண்ட வானளாவிய கட்டடங்களையும் கொண்ட நொய்டாவில், இந்த 400 குடும்பங்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காகச் சாக்கடைகளின் ஓரத்தில் பள்ளம் தோண்டி, அதில் கசிந்து வரும் தெளிவான நீரைப் மொண்டு பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பறந்து விரிந்த நெடுஞ் சாலைகளும், மாபெரும் கட்ட டங்களும், கார்ப்பரேட் வளர்ச்சி அமைப்புகளும் நிறைந்த ஒரு நவீன நகரத்தின் மய்யப் பகுதியில், 18-ஆம் நூற்றாண்டின் வரலாற்று அடக்குமுறையை ஒத்த சூழல் நிலவுவது, “இந்துத் துவ ஆட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்தின் நிதர்சனம் இது தானா?” என்ற கடுமையான விமர்சனங் களையும் சமூக ஆர்வலர் களின் கண்டனங் களையும் எழுப்பியுள்ளது.

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, சாக்கடை நீரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வால்மீகி நகர் மக்களுக்கு உடனடி குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *