துறையூர் கழக மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் வெளியீட்டு விழா!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

துறையூர், ஆக. 6- துறையூர் விநாயகர் தெரு அரசு சமுதாயக் கூடத்தில் 18.7.2026 அன்று மாலை 6.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு துறையூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனைவர் பெ.பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பி.பிரபு வரவேற்புரையாற்றினார்.மாவட்ட காப்பாளர் ப.ஆல்பர்ட்., மாவட்ட கழக செயலாளர் ஜெ.தினேஷ் பாபு, மாவட்ட துணைத் தலைவர் முசிறி மா.ரத்தினம், மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கவுரையை மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ. சண்முகம் ஆற்றினார். நூல் பற்றிய விளக்கவுரையை மிகச் சிறப்பாக திராவிட மாணவர் கழக இணை செயலாளர் வே. இளமாறன் விளக்கி பேசினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மு. தினேஷ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூலை துறையூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், திருச்சி மாவட்ட முன்னாள் ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந் திரன், துறையூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் இள. அண்ணாதுரை, மு. வீரபத்திரன், ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர்  சரண்யா மோகன் தாஸ், சிங்களாந்தபுரம் திமுக கிளைச் செயலாளர் வே. விஜயகுமார் மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ப.க. துணைத் தலைவர் த.கலைப் பிரியன், மாவட்ட ப. க. துணைச் செயலாளர் எஸ்.என்.புதூர் கருணாகரன், உப்பிலியபுரம் ஒன்றிய தி.க. தலைவர் மாராடி. எம்.ஏ.ரமேஷ், பாலையூர் மு. முத்துச் செல்வன், முருகானந்தம், ஆதிமூலம், பிரகாஷ், மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் பாலச்சந்திரன், துறையூர் ஒன்றிய தலைவர் வரதராஜன், நா.தினேஷ், நகர தலைவர் க.ராஜா, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.செந்தில் குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் த.ரஞ்சித், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு.சரண்ராஜ், கபில்தேவ், வழக்குரைஞர் அ.தமிழ்செல்வன், மாணவர் கழக ரெ.காவ்யா, ம.இனியன்சம்பத்,நகர இளைஞரணி தலைவர் முரளி, எம்.ஆர்.சந்திரபோஸ், சர் ஜூன், கண்ணனூர் குணாள், பெரியார் கண்ணன், ஆர்ட்டிஸ்ட் பன்னீர்செல்வம்,  சரசுபன்னீர் செல்வம், மாலினி,  சங்கீதா, பெரியார் பிஞ்சு பெரியார் டார்வின், அகல்யா, செல்வி, கவுசல்யா, காளிப்பட்டி பிரேம்குமார், காளிப்பட்டி மோகன் தாஸ், மணி, பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *