மன்னார்குடி, ஆக. 6- 1.8.2026 அன்று மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர்கழகத்தின் சார்பில் மன்னார்குடி நகரத்தில் உள்ள தந்தைபெரியார் படிப்பதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை.கவுதமன் தலைமையேற்றார். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் தங்க.வீரமணி வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் சா.முரளிதரன், பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதனும், திராவிடர் கழக மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வம், மன்னார்குடி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அழகிரி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சு.அறிவானந்தம், பகுத்தறிவாளர் கழக நகரச் செயலாளர் பேராசிரியர் கோ.காமராஜர், கோட்டூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் சு.இராமலிங்கம், கோட்டூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆ.சுரேஷ், கோட்டூர் ஒன்றிய பகுத்தறிவாளக் கழக செயலாளர் கா. சுருளிராஜன், நீடாமங்கலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலர் முரளி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ் தொடக்க உரையாற்றினார்.மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் நூல் அறிமுக விழா கூட்டத்தை விரிவாக பேசி தொடங்கி வைத்தார்.
கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் நூலைப்பற்றி மிகச் சிறப்பாக ஆய்வுரை வழங்கினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்களும், பேராசிரியர் பெருமக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
