போராட்டத்தின்போது காவல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் இளைஞர்களின் கோரிக்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.6- போராட்ட களத்தில் நிலைமை வன்முறையாக மாறுவதற்கு முன்பு இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு கவனமாகச் செயல்பட வேண்டுமெனவும் அவர்களின் கோரிக் கைகளை அதிகாரிகள் புரிந்துகொள்ள முயல வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஆத்திரமூட்டும் வகையிலான பொது அறிக்கைகளை வெளியிட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட வன்முறைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யாபக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக் குரைஞர் ரிஸ்வான் அகமது ஆஜராகி, வாதிட்டதாவது:

நாடாளுமன்ற முற்றுகை பேரணிக்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பேரணி நடை பெற்றது. இதில் ஏற்பட்ட மோதல்களை தடுக்கவும் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களை கலைக்கவுமே காவல் துறையினர் தடியடி நடத்தினர். நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது சாதாரண விசயம் கிடையாது.

ஒருவேளை இந்த முற்றுகைப் போராட்டம் ஒரு கலவரமாக மாறி துப்பாக்கி சூடு நடந்திருந்தால் யார் பொறுப்பேற்பது? இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் ஏற்பாட் டாளர்களை்ப் பொறுப்பேற்க வைக்க வேண்டும். கல் எறிதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனையாக சமூக சேவையில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: ஒரு போராட்டக் களத்தில் நிலைமை வன்முறையாக மாறுவதற்கு முன்பு, அந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு நாம் கவனமாகச் செயல்பட வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூறி, அமைதிப்படுத்துவதோடு, பிறரின் கருத்துகளுக்குச் செவிமெடுப்பதும் மிகச் சிறந்த விசயம் ஆகும், அந்த வகையில், போராடும் இளைஞர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்கள் எதற்காக முழக்கமிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், போராட்டங்களைக் கையாளும் போது காவல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிச் செல்லாதவாறு பார்த்துக் கொள்வதோடு, அமைதியான போராட்டங்களுக்கு வழிவகுப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் எங்கு நிகழ்ந்தாலும், அவற்றை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனைதொடர்ந்து, இந்த மனு மீது ஒன்றிய அரசு பதிலளிக்க அறிக்கை பிறப்பித்த நீதிபதிகள், இந்த மனுவை போராட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள பிற மனுக்களுடன் இணைக்குமாறு உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *