விருதுநகர், ஆக. 5- விருதுநகர் பாவேந்தர் பேரவை மற்றும் குறள் நெறிக் கழகம் சார்பில், 19.07.2026 அன்று காலை 11 மணிக்கு, விருதுநகர் வி.வி.எஸ். அரங்கில், செந்தமிழ்க் காவலர், பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் க.திருமாறன் அவர்கள் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனை வர் வா.நேரு நிகழ்வின் தலைமையேற்று நினை வேந்தல் உரையாற்றினார். அய்யா க.திருமாறன் இணையர் பத்மா திருமாறன், மகன் தி.அற வள்ளுவன், மகள் வே.வளர்மதி, அவரது இணையர் வை.வேலன் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில், மாவட் டக் கழகத் துணைத் தலைவர் கா.நல்லதம்பி வரவேற்புரையாற்றினார்.
வணிகர் சங்கத் தலைவர் வி.வி.எஸ். யோகன் அய்யாவின் படத்தினை திறந்து வைத்து புகழ் வணக்க உரையாற்றினார். குறள் நெறிக் கழகப் பொறுப் பாளர்கள் ச.நடராஜன், பேரா. கா.சிறீதர், பாவேந்தர் பேரவை செ.சோலைச்சாமி, நகர் மன்றத் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ஆர். மாதவன் தி.மு.க. நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், மதுரை பி.வரதராசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் அருப்புக்கோட்டை ந.ஆனந்தம், வத்திராயிருப்பு குறிஞ்சிக்கபிலர், அருப்புக்கோட்டை ஆயை.மு.காசாமைதீன், பாவணர் கோட்டப் பொறுப்பாளர் ஆ.நெடுஞ்சேரலாதன், விருதுநகர் மூட்டா அமைப்புத் தலைவர் பேரா. பெ.க.பெரியசாமிராஜா, மதுரை பேராசிரியர் இ.கி.இராமசாமி ஆகியோர் நினைவேந்தல் உரை யாற்றினர்.
விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.புகழேந்தி, இரா.அழகர், மகளிரணிச் செயலாளர் பொன்மேனி ராஜயோகம், இளைஞரணி அமைப்பாளர் க.திருவள்ளுவர், பந்தல்குடி பேரா. வே.வேங் கடசுப்பையன், சிவகாசி மாநகரத் தலைவர் மா.முருகன், செயலாளர் து.நரசிம்மராஜ், சிவகாசி ஒன்றியச் செயலாளர் பெ.கண்ணன், இளைஞ ரணி இரா.மணிமாறன் மற்றும் தோழர்கள், பேராசிரியர் பெருமக்கள், உறவினர்கள், நண்பர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட தி.மு.க. அயலக அணித் துணை அமைப்பாளர் மா.பாரத் நன்றி கூற கூட்டம் நிறை வுற்றது.
