40 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு, வழமையான குருதிப் பரிசோதனையின் போதும், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் எடுக்கப்படும் பரிசோதனைகளில் ஒன்று HB count எனப்படும் ஹீமோ குளோபின் (இரத்தச் சிவப்பணுக்கள்) எண்ணிக்கை தான்.
1 டெஸி லிட்டர் (100 மி.லி) இரத்தத்தில்,
பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
இந்த எண்ணிக்கை சில பெண்களுக்கு மிகக் குறைவாக அமைந்து விட்டால் அவர்களை எவ்விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் உட்படுத்தமுடியாது.
அத்தகையோரை மருத்துவர்கள் ஹீமோ குளோபின் அதிகமிருக்கும் உணவு வகைகளைச் சாப்பிடச் சொல்லியும் இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குகளையும், மாத்திரை மருந்துகளையும் சாப்பிட்டு ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வரச் சொல்லி பரிந்துரைப்பார்கள்.
பொதுவாக இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குகளை உட்கொள்ளும் போதும் சரி, மாத்திரைகளை உட்கொள்ளும் போதும் சரி நிறையத் தண்ணீர் அருந்த வேண்டும் அல்லது நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது.
அதனால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப் பவர்கள் வெறும் மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதோடு இயற்கையாகவே இரும்புச் சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், கீரைகள் உள்ளிட்ட உணவு வகைகளை அன்றாடம் தங்களது சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் சிவப்பணு எண்ணிக்கையும் உயரும், மலச்சிக்கலில் இருந்தும் தப்பலாம்.
இரத்தத்தில் சிவப்பணுக்கள் 12 mg/L-க்கு கீழ்க் குறைவது குருதிச் சோகை (அனிமியா) என்றழைக்கப்படுகிறது. இதன் அறிகுறிகள் உடற்சோர்வு, மூச்சுத்திணறல், மயக்கம், தோல் வெளிர்ப்பு ஆகியனவாகும். இந்த அறிகுறிகள் இருக்கும் போது மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியமாகும்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை உயர்த்தும் உணவுகள்:
முருங்கைக் கீரை
சுண்டைக்காய்
சிவப்பு மூக்கடலை (நாட்டு முக்கடலை)
பாசிப்பயறு (அவித்தோ முளைகட்டியோ சாப்பிடலாம்)
மணத்தக்காளி வற்றல்
எள்ளுருண்டை
அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை
கருப்புத் திராட்சை – (நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.)
நாட்டுப் பேரீட்சை
கறிவேப்பிலைத் துவையல்
பீர்க்கங்காய்
பிரண்டை
முள்ளங்கி
பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி
உளுந்து, கேழ்வரகு தோசை
பொன்னாங்கன்னி கீரை, தண்டுக்கீரை அல்லது முளைக்கீரை
வெள்ளாட்டுக் கறி, ஈரல், எலும்பு சூப்
மலைநெல்லிக்காய்ச் சாறு, பழரசம்
பனைவெல்லப் பாகில் புரட்டிய சிறு தானிய மாவுருண்டை
