தமிழ்நாடு இதுவரை கண்டிராத மோசமான அரசு! த.வெ.க. ஆட்சி குறித்து உதயநிதி விமர்சனம்!

1 Min Read

தஞ்சாவூர், ஆக. 4- காவிரிப் பிரச்சினையை தமிழ்நாடே தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ரீல்ஸ் மோகத்தில் உள்ளனர். இதுபோன்ற மோசமான அரசை, தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. முதலமைச்சர், நீர்வளத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கின்றனர்.

வேளாண்மை துறை அமைச்சர் பட்ஜெட் நகலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு செல்கிறார். இதுதான் இந்த அரசின் லட்சணம். மொத்த அமைச்சரவையும் ஜோக்கர் கூட்டமாக உள்ளது. மேட்டூர் அணை திறக்கப்படாதது பற்றிய கவலை விஜய்க்கு இல்லை.

குறுவை சாகுபடி பொய்த்ததால் சுமார் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், மமக பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா, மஜக தலைவர் தமீமுன் அன்சாரி, முன்னாள் அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *