“ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றும் திட்டம் அரசுக்கு இல்லை” மக்களவையில் தகவல்

2 Min Read

புதுடில்லி, ஆக. 4- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உறுதியான மாதாந்திரத் தொகையை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப் படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் (யுபிஎஸ்) எந்த மாற்றத்தையும் செய்யும் திட்டமோ அல்லது திட்டத்தை மாற்றும் திட் டமோ அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் வரும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உறுதியான மாதாந்திரத் தொகையை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப் படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் எந்த மாற் றங்களையும் செய்வது அல்லது திட்டத்தை மாற்றுவது என எந்த முன்மொழிவும் அரசின் பரிசீலனை யில் இல்லை. என்பிஎஸ்-இன் கீழ் வரும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஒரு விருப்பத் தேர்வாக யுபிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிதாகச் சேர்ந்தவர்கள், தற்போது பணியில் உள்ளவர்கள், ஏற்ெகனவே ஓய்வு பெற்றவர்கள் உட்பட யுபிஎஸ்-அய் தேர்ந்தெ டுத்த ஊழியர்களின் மொத்த எண் ணிக்கை ஜூலை 19, 2026இன்படி ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 195 ஆக உள்ளது.

நிதி ரீதியாகப் பொறுப்பான, நிதியுதவி மற்றும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை உறுதி செய்யும் அதே வேளையில், ஓய்வுக்குப் பிந்தைய உறுதியான ஓய்வூதியம் குறித்த என்பிஎஸ் ஊழியர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் வகையில் யுபிஎஸ் உருவாக்கப்பட் டுள்ளது. இத்திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஊழியர்கள் மற்றும் சங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், யுபிஎஸ்-அய் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு நவ. 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டது. ஒன்றிய சிவில் பணி விதிகள் 2021ன் கீழ் உள்ள ஓய்வுக்கால பணிக்கொடை மற்றும் இறப்புக்கால பணிக்கொடை ஆகியவற்றின் பலன்களை யுபிஎஸ்-ன் கீழ் வரும் ஒன்றிய அரசு ஊழியர் களுக்கும் அரசு நீட்டித்துள்ளது.

என்பிஎஸ்-க்கு வழங்கப்படுவது போல வரிச்சலுகைகளை யுபிஎஸ்-க்கும் அரசு நீட்டித்துள்ளது. கூடுத லாக யுபிஎஸ்-அய் தேர்ந்தெடுத்த ஒன்றிய அரசு ஊழியர்கள் மீண்டும் என்பிஎஸ்-க்கு மாறுவதற்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கும் வசதியை அரசு அனுமதித்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *