சென்னை, ஆக.4- பணியில் இருக்கும்போது போக்கு வரத்துக் காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறி வுறுத்தியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் சிக்னலில் பெண் ஒருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. உயர் நீதிமன்றத்திற்கு வரும் வழியில் இந்த விபத்தைக் கண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்து பணியில் உள்ள காவல்துறையினர் கைப்பேசியில் பேசுவதிலும், பாட்டு கேட்பதிலும், காட்சிப் பதிவு பார்ப்பதிலும் தீவிரங் காட்டுவதால் தான் இதுபோன்ற விபத்துகள் நேர்வதாக கருத்து தெரிவித்திருந்தார். பணியில் இருக்கும்போது போக்குவரத்துக் காவல்துறை யினர் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என சுற்றறிக்கை பிறப்பிக்கப்படவேண்டும் எனவும் தமிழ்நாடு டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
