அறிவுக்கடல் எனும் பெரியார் திடலில், கழகத்தின் துணைத் தலைவராகவும், கழகத்தின் போர்வாள் ‘‘விடுதலை’’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இருப்பவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்! அதுமட்டுமின்றி கழகத் தோழர்களுக்கும் உற்ற துணையாக இருந்து வருபவர்!
மும்பை மாநிலத் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்வு களுக்கும் உற்றத் துணையாக ஊக்கப்படுத்துபவர். சில நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கெடுப்பவர். எப்போது தொடர்பு கொண்டாலும் மும்பை இயக்கத்தையும், தோழர்களின் பெயர்க ளையும் குறிப்பிட்டு நலம் விசாரிப்பார். தேவையான ஆலோசனை நாங்களும் கேட்டறிவோம்!
எங்கள் தந்தையார் எஸ்.எஸ்.அன்பழகன் அவர்கள், 2014 ஆம் ஆண்டு மும்பையில் மறைந்த தையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யாவின் ஆலோ சனையின் பேரில், கவிஞர் அவர்கள் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அய்யாவின் இணையர் வெற்றிச்செல்வி அம்மா உள்ளிட்ட மகளிரணித் தோழர்களும் கலந்து கொண்டனர்.
எங்களுக்குப்
பெருமையான ஒன்று!
2017 ஆம் ஆண்டு பெரியார் திட லில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில், ஆசிரியர் அவர்கள் என்னையும், என் இணையர் ஜூலியட் அவர்களையும் தந்தை பெரியார் சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்யக் கூறினார்கள். அதையொட்டி எனது இணையருக்கு, கவிஞர் அவர்கள் பொன்னாடை அணி வித்துச் சிறப்பித்தார்கள். அந்நிகழ்வு எங்களுக்குப் பெருமையான ஒன்று!
அதேபோல மும்பை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கவிஞர் அவர்கள், ஓரிரு நாட்கள் எங்கள் வீட்டில் தங்கி இருந்தார்கள். அதுவும் எனக்கொரு நல்ல வாய்ப்பு.
ஆரிய இருள் நீக்க நாளும் உழைக்கும் திராவிட மின்சாரம், திரா விடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்!
தமிழ்நாட்டில் எந்த மாநாடுகள் நடந்தாலும் மும்பைத் தோழர்கள் கலந்து கொள்வோம். தமிழ்நாட்டு மாநாட்டிலும் மும்பைக் கழகத்தை எப்போதும் சிறப்பு செய்வார்கள் ஆசிரியரும், கவிஞரும்!
‘‘சமூக நீதிக்கான
கி.வீரமணி’’ விருது
இயக்கப் பணிகளில் பொன்விழா கடந்த கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில், அதன் இயக்குநர் சோம.இளங்கோவன் தலைமையில், ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி’’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட இருக்கிறது. இச்செய்தி இயக்கத் தோழர்கள் அனை வருக்கும் பூரிப்பான செய்தியாகும்! கவிஞர் அய்யாவிற்கு மும்பை வாழ் தோழர்கள் சார்பாகவும் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கி றேன்.
நன்றி!
