சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த பதிப்பாளரும் கவிஞருமான வைகறை வாணன் (வயது 77) 1.8.2026 அன்று இரவு 8.30 மணிக்கு மறைவுற்றார்.
அவரின் இறுதி நிகழ்வு நேற்று (2.8.2026) மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவருக்கு கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி இறுதி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் வேலூர் பாண்டு, பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன், மகளிர் அணி பொறுப்பாளர் தேவி சக்திவேல், தொழிலாளர் அணி பொறுப்பாளர் மணிகண்டன், மாவட்ட ப.க. செயலாளர் ஜெ.குமார், சக்திவேல் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
