கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.8.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அடுத்தகட்டப் போராட்டம்? கரப்பான் பூச்சி கட்சி ஆக.5ஆம் தேதி ஆலோசனை: மகாராட்டிராவில் நடக்கிறது

* காணிக்கைத் திருடர்கள் அனைவரும் பாஜகவில் உள்ளனர்: ராமன் கோயில் விவகாரத்தில் காங். கடும் தாக்கு. முன்னாள் உபி அமைச்சரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான பிரமோத் திவாரி கூறியதாவது: ராமன் கோயில் நன்கொடைகளில் இருந்து மட்டும் திருட்டு நடக்கவில்லை. கடந்த 1980களின் இறுதியில் ராமன் கோயிலுக்கான செங்கல்கள் கொண்டு செல்லும் பூஜைகளின் போதே இது போல் நடந்துள்ளன.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே, மிரட்டிப் பணம் பறிப்பு புகார்கள் அதிகரித்துள்ளன. முன்னாள் திரிணாமுல் நிர்வாகிகள் கொண்டு வந்த ‘வசூல் கலாச்சாரம்’ இன்னும் நீடிப்பதாக பாஜக மூத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ரூ.1,800 கோடி இழப்பு வழக்கு: ஈபிஎப்ஓ நிதி மோசடி தொடர்பாக அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் மீது சிபிஅய் வழக்குப்பதிவு. முறைகேடான கடன், நிதி திசைதிருப்பல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை தீவிரம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்ற நிலுவையில் 158 சிபிஅய் வழக்குகள்: 20 ஆண்டாகியும் விசாரிக்கவில்லை.

* பாஜக ஆட்சிக்கு பிறகு உத்தரப் பிரதேசத்தில் 26,000-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டதாக அகிலேஷ் குற்றச்சாட்டு. இதனால் ஓபிசி, எஸ்சி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தி இந்து:

* பெயர் நீக்கம்: ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் நீக்கியுள்ளது. மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டு வாசல் ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் என இனி குறிப்பிடப்படுகிறது.

தி டெலிகிராப்:

* அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. நிலம் வாங்கிய கட்டத்திலிருந்தே நிதி முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* கோயில் கொள்ளை: மும்பை சித்திவிநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் ரூ.18 கோடி நன்கொடை முறைகேடு நடைபெறுவதாக ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.அயோத்தி ராமர் கோயிலிலும் ரூ.1,400 கோடி நிதி மோசடி நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *