ராமன் கோயில் நன்கொடை முறைகேடு பா.ஜ.க.மீது காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கடும் குற்றச்சாட்டு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

அயோத்தி, ஆக.3 ராமன் கோயிலில் நன்கொடை திருட்டு மற்றும் நிதி கையாடல் தொடர்பாக, முன்னாள் உத்தரப்பிரதேச அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமோத் திவாரி பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவத் பகுதியைச் சேர்ந்தவரான பிரமோத் திவாரி, 1985 முதல் 1990 வரை உபி சுற்றுலாத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். ராமன் கோயிலில் தற்போதைய நன்கொடை திருட்டு மட்டுமின்றி, 1980-களின் இறுதியில் நடைபெற்ற செங்கல் பூஜைகளின் போதே இத்தகைய கையாடல்கள் தொடங்கின என்றார்.”பாஜகவில் உள்ள அனைவரும் காணிக்கை திருடர்கள் இல்லை; ஆனால் காணிக்கை திருடர்கள் அனைவரும் அந்த கட்சியில் தான் இருக்கிறார்கள்” என அவர் சாடினார்.

உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாகவே ராமன் கோயில் கட்டப்பட்டது என்றும், பாஜகவால் கட்டப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடிக்கு கோயிலை விட தேர்தலே முக்கியமாக இருந்ததால், கட்டி முடிக்கப்படாத கோயிலுக்கு அவசர அவசரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனத் தெரிவித்தார். ராமன் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளராக சம்பத் ராய் இருந்த காலத்தில், காணிக்கை திருட்டு என்பது ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட செயலாகவே மாறிவிட்டது.

இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. கோயில் பெருமைகளைத் தனதாக்கிக் கொள்ளும் பிரதமர், இந்தத் திருட்டுப் பாவங்களில் இருந்தும் பொறுப்பிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது என பிரமோத் திவாரி குற்றம் சாட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *