இஸ்ரோவில் இருந்து வெளியேறும் விஞ்ஞானிகள் – விண்வெளித் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்

1 Min Read

சிறீஅரிக்கோட்டா ஜூலை 21- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100க்கும் மேற் பட்ட முதல்நிலை விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளனர். சமீப காலமாக, 1,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இஸ்ரோவின் மொத்த பணியாளர்களில் 25 சதவீதமாகும்.

விண்வெளித் துறையில் விதிகளை மாற்றி தனியாரும் விண்வெளித் திட்டங்களில் பங்கேற்க லாம் என்று கடந்த 2020ஆம் ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. இதையடுத்து, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட 400 நிறுவனங்கள், விண்வெளி ஆய்வில் இணைந்துள்ளன.

இந்நிறுவனங்கள் மிக வே கமாக, ராக்கெட் வடிவமைப்பு, செயற்கைக் கோள் கட்டமைப்பு, உந்துவிசை செயல்பாடுகளில் வளர்ந்து வருகின்றன. இவற்றுக்கு மிகவும் திறமையான விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப பணி யாளர்கள் தேவை.

எனவே, பணி ஏற்ற உடனேயே மிகப்பெரிய திட்டங்களுக்கு, தலைமை ஏற்கும் பொறுப்பு, பல மடங்கு ஊதியம் உள் ளிட்ட சலுகைகளை வழங்க முன் வருகின்றன. இதனால், தன்னிச் சையாக சாதிக்க துடிக்கும் இளம் விஞ்ஞானிகள், இஸ்ரோவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளில் சிலர், தனியார் விண்வெளி நிறுவ னங்களின் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகின் றனர். ஊழியர்கள் வெளியேறியதால், இஸ்ரோவின் இந்தாண்டுத் திட்டங்கள் தாமதமாகி உள்ளன. 10க்கும் மேற்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்குள் 7 விண்கலங்கள், 6 செயற்கைக்கோள்களை இறுதி செய்யும் கட்டாயத்தில் இஸ்ரோ உள்ளது. மேலும், குலசேகரப் பட்டினம் விண்வெளி நிலையத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடப்பதால், சிறிய ரக ஏவுதல்களை அங்கிருந்து நடத்தும் ஆய்வுகளும் நடக்கின்றன. அந்த பணிகள் பாதிக்காமல் இருக்க விஞ்ஞானிகளின் பதவி விலகல் மற்றும் விருப்ப ஓய்வுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *