தரமற்ற பாலித்தீன் ஃபிலிம் ரோல்கள் பெங்களூரு நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியது மதுரை ஆவின்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மதுரை, ஆக. 2- பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வீசுவதாக நுகர்வோரிடமிருந்து புகார் கள் எழுந்ததை அடுத்து, பால் பாக்கெட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 160 பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை மதுரை ஆவின் நிர்வாகம் பெங்களூரு நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் நிறுவனங் களுக்குப் பால் பாக்கெட் தயாரிப்பதற்கான பாலித்தீன் ஃபிலிம்களை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விநியோகம் செய்து வருகிறது. அண்மையில் விநியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டு களில் ஒருவித ரசாயன வாடை அடிப்பதாகப் பொதுமக்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதன்பேரில் ஆவின் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், விநி யோகம் செய்யப்பட்ட பாலித்தீன் ரோல்களின் தரக்குறைபாடே இந்த நெடிக்குக் காரணம் எனத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மதுரை ஆவின் மண்டலத்திற்கு வந்த 160 பாலித்தீன் ஃபிலிம் ரோல்களைப் பயன்படுத்தாமல், அவற்றை உடனடியாகச் விநியோகம் செய்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பாலின் தரத்தையும் நுகர்வோரின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தேவையான மாற்று ஏற்பாடுகள் தீவிர மாகச் செய்யப்பட்டு வரு கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *