புதுடில்லி ஆகஸ்ட் 1 இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதன்முறையாக, உயிருள்ள இதயத் துடிப்புடன் கூடிய இதயம் ஒன்று, அவசர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சூரத்திலிருந்து அகமதாபாத்திற்கு 250 கிலோமீட்டர் தூரம் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
காலை 8:58 மணிக்கு சூரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், 152 நிமிடங்களில் அகமதாபாத்தை வந்தடைந்தது. இதற்காக ரயில்வே துறை சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், அகமதாபாத் நகரில் சாலைகளில் அதிவேக பசுமை வழித்தடமும் உருவாக்கப்பட்டது.
பின்னர், அந்த இதயம் மருத்துவமனையில் காத்திருந்த இதய மருத்துவப் பயனாளி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இந்த வேகமான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியால், ஆபத்தான நிலையில் இருந்த மருத்துவப் பயனாளிக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து 2025 முதல்
4,840 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்
வெளியுறவு அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஆகஸ்ட் 1 2025ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவால் மொத்தம் 4,840 இந்தியக் குடிமக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 2025-இல் 3,567 பேரும், 2026-இல் ஜனவரி 1 முதல் ஜூலை வரை 1,273 பேரும் அடங்குவர். இந்த ஆண்டு (2026) ஜனவரி 1 முதல் இன்று வரையிலான காலத்தில் மட்டும் 1,273 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார்.
