ரூ.19.3 கோடி மோசடி : ‘நோக்கியா’ நிறுவன அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி ஆகஸ்ட் 1-  போலி பி.எப். கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி செய்ததாக நோக்கியா அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஅய் அதிகாரிகள் கூறியதாவது: 94 போலி பிஎப் கணக்குகளை உருவாக்கி, ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பிடமிருந்து (இபிஎப்ஓ) ரூ.19.33 கோடி முறைகேடாக பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றும் வைபவ் வர்மா, காமராஜு முத்யாலா ஆகியோர் மீது சிபிஅய் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்கள் இருவரும் 94 போலி பிஎப் கணக்குகளை உருவாக்கி, அவற்றில் ரூ.19.33 கோடியை மாற்றியுள்ளனர். 2023 ஆகஸ்ட் வரை இபிஎப்ஓ சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனமாக நோக்கியா செயல்பட்டு வந்தது. 2023 ஜூலையில் முந்தைய சேமிப்புத் தொகைகள் அனைத்தையும் இபிஎப்ஓவிடம் ஒப்படைத்தது. இந்த மாற்றத்துக்கு பிந்தைய நடைமுறைகளின் போதுதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வாறு சிபிஅய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *