பெங்களூரு செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை திருவள்ளுவர் சங்கம் ரூ.10 லட்சம் நிதி

2 Min Read

பெங்களூரு ஜூலை 31- கருநாடக மாநிலத்தில் தமிழில் இளங்கலை, முதுகலை கற்க வாய்ப்பில்லாத நிலையில், பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இருப்பதாக திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் கூறியுள்ளார்.

கருநாடக மாநிலத்தில் சுமார் 1 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு இயங்கி வந்த கருநாடக அரசு மற்றும் தனியார் தமிழ்ப் பள்ளிகள் போதிய மாணவர் சேர்க்கை இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை, தமிழ் மொழி மீதான ஒவ்வாமை, தமிழ் கற்பதில் ஆர்வக் குறைவு உள் ளிட்ட காரணங்களால் நாளுக்கு நாள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழர்களுக்கு தாய் மொழி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வி அளவில், பெங் களூருவில் உள்ள பல்கலைக் கழகங்களில் இரண்டாம் மொழியாக தமிழ் கற்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழில் இளங்கலை, முதுகலை கற்க இயலாது. ஏனென்றால் பெங்களூருவில் எந்த பல்கலைக் கழகத்திலும் தமிழ்த் துறை இல்லை. காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பணியிடமும் நிரப்பப்படாமல் உள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அதன் துணை வேந்தர் விக்டர் லோபோ ஒப்புதல் அளித்துள்ளார்.

திருவள்ளுவர் சங்கத்தின்
தலைவர் எஸ்.டி.குமார்

இதுகுறித்து திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் செய்தியாளரிடம் கூறியதாவது: “எங்களுடைய அமைப்பின் சார்பில் கடந்த 5ஆம் தேதி செயிண்ட் ஜோசப் பல் கலைக் கழகத்தில் ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு நடத்தினோம். அம்மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும், இந்த பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினோம்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் விக்டர் லோபோவை சந்தித்து பேசினேன். திருக் குறளை தேசிய நூலாக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப் போவதாக உறுதியளித்தார். அதேபோல செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும் ஒப்புதல் அளித்தார்.

தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பான முடிவை பல் கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற குழுவின் முன்வைத்து, அவர்களின் ஒப்புதலைப் பெற்று முறைப்படி தமிழ் இருக்கை அமைக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் கருநாடகாவில் முதல் முறையாக பல்கலைக் கழகம் ஒன்றில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.

செயிண்ட் ஜோசப் பல் கலைக் கழகம் தமிழ் இருக்கை அமைக்கும் பணிகளுக்கு எனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சம் அளிக்க இருக்கிறேன். இந்த இருக்கை அமைந்தால் கருநாடகாவை சேர்ந்த தமி ழர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழர் களும் பயனடைவார்கள்.” இவ் வாறு எஸ்.டி.குமார் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *