தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 31– ‘நீட்’, உயர் ஜாதி இடஒதுக்கீடுக்கான  எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது என்று கண்டனம் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் – ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியை த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும் என்று தனது சமூக வலைதளப்பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து நேற்று (30.–07.–2026), தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவுவில் கூறியதாவது:

‘நீட்’, உயர் ஜாதி இடஒதுக்கீடுக்கான எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிட த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது!

தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசுபெரியார் திடலிலேயே காவல்துறையினரைக் குவித்திருப்பது ஏன்?

திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாருடைய அழுத்தத்துக்குப் பணிந்து இதைச்செய்கிறார்கள்?

கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டி யிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத் துக்குரியது.

சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.

அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியை த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!”

இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப்பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *