விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்காத த.வெ.க அரசைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, அரியலூர், லால்குடி, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுக் கண்டன முழக்கமிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
