பட்டினமருதூர் அகழாய்வுப் பணியில் உறை கிணறுகள் கண்டெடுப்பு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கோவில்பட்டி, ஜூலை 30– ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உட்பட்ட தருவைக்குளம் அருகே பட்டினமருதூரில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து பழங்கால சங்குகள், பாசி மணிகள், கவுரி செல்ஸ் (சோவிகள்), அலங்கார வளைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்குகள் அறுக்கப்பட்டு, அதிலிருந்து உருவாக்கப்படும் ஆபரணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், சீனா நாட்டு நாணயங்கள், அந்நாட்டின் பீங்கான் ஓடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

உறை கிணறுகள், கற்களால் ஆன சுவர், சுடுமண்ணாலான பீப்பாய் போன்ற வடிகால் குழாய் கண்டெடுக்கப்பட் டுள்ளன. தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன் கடந்த 25-ஆம் தேதி பட்டினமருதூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். ‘இப்பகுதியில் சங்குகள் அதிகளவில் கிடைக்கப்பெற்றதை வைத்து, சுமார் 200 ஏக்கருக்கு மேலான பரப்பளவில் மிகப்பெரிய சங்கு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது தெரிகிறது.

முழு சங்கு எடுத்து வந்து, அதனை அறுத்து, அதில் இருந்து வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் செய்து ஏற்றுமதி செய்துள்ளனர். சீன நாட்டு நாணயங்கள் அந்நாட்டுடன் வர்த்தம் இருந்ததை காட்டுகின்றன. சங்கு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளதை வைத்து இப்பகுதியில் திசையாயிரத்து அய்ந்நூறு என்ற வணிக்குழு இருந்திருக்கலாம். இந்த இடத்தின் காலத்தைக் கணிக்க மேலும் அகழ்வாராய்ச்சிகள் தேவை’ என அகழ்வாராய்ச்சி இயக்குநர் ஆர்.அஜய் குமார் கூறினார்.

தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறுகையில், ‘பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் காணப்படும் வட்ட வடிவிலான உறை கிணறுகள் தண்ணீர் தேவை இருந்துள்ளதை காட்டுகின்றன. சுடு மண்ணாலான குழாய் கட்டடங்களை தண்ணீர் வெளியேறுவதற்காக பயன்படுத்தி இருக்கலாம். அடுத்தகட்ட ஆய்வுகளின் போது, குழாயின் வழித்தடத்தை கண்டறியலாம்.

சங்குகள், சங்கு வளைகள், சங்குகளில் இருந்து தயாரிக்கப்பட்ட சோவிகள்

இதன் மூலம் பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை மற்றும் வடிகால் அமைப்பு குறித்த தொழில்நுட்பங்கள் தெரியவரும். பட்டினமருதூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள பனையூரில் கடற்சார் புதைபடிமங்களை தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன் பார்வையிட்டார். அங்கும் அகழாய்வு பணி மேற்கொள்ள அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *