சென்னை, ஜூலை 30 சென்னை பெருநகர மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமை யில் நேற்று (29.7.2026) நடைபெற்றது. வழக்கமாக அதிக எண்ணிக்கையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இக்கூட் டத்தில், இந்த முறை மிகக் குறைவாக 19 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
திராவிட மாடல் அரசின் சாதனை –
மேயர் உரை
மேயர் உரை
கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய மேயர் பிரியா, “திமுக அரசைத் தனிமைப்படுத்த நினைப்பவர்களின் முயற்சி ஒருபோதும் பலிக்காது” என்றார். மேலும், “ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் அண்மைய அறிக்கையில், முதலீடுகளை ஈர்ப்பது, வணிகச் சூழல், நிதி நிலைத்தன்மை மற்றும் நீர் திறன் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு பார்வையாலேயே தமிழ்நாடு இந்த உன்னத நிலையை அடைந்துள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார.
அதிகாரிகள் மீது வரிசைகட்டிய புகார்கள்
கூட்டத்தின் கேள்வி நேரத்தில், கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழுத் தலைவர்கள் அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்: திமுக உறுப்பினர் பரிதி இளம் சுருதி: “கவுன்சிலர்களின் கோரிக்கையால் நிறைவேற்றப்பட்ட பணிகளை, கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அமைச்சர்களைக் கொண்டு மண்டல அலுவலர்கள் திறக்கின்றனர். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களிடம் நெருக்கம் காட்டுவதற்காகவே அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.”
மண்டல குழுத் தலைவர் கு.பி.ஜெயின்: “சென்னை மாநகராட்சி பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கும் போதும், முக்கிய ஆய்வுகளின் போதும் மாமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுப்பதில்லை.” துணை மேயரும் அதிகாரிகளின் இந்த அணுகுமுறைக்குக் கண்டனம் தெரிவித்தார்.
அரசியல் வேறு, மக்கள் பணி வேறு:
மேயர் பிரியா அதிரடி
மேயர் பிரியா அதிரடி
புகார்களுக்குப் பதிலளித்துப் பேசிய மேயர் பிரியா, “அரசியல் வேறு, மக்கள் பணி வேறு. அரசு மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகளுக்கு மாமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் கட்டாயமாக அழைக்க வேண்டும். அதில் பங்கேற்பது குறித்து உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்வார்கள். அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்டு அதிகாரிகளாக மட்டுமே பணியாற்ற வேண்டும்” என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார்.
