29.7.1944இல் கடலூரில் தந்தை பெரியார் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில் தோழர்கள் வீரமுழக்கம்!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கடலூர், ஜூலை 30- செருப் பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும் என்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் தந்தை பெரியார் 1944 ஜூலை 29 அன்று கடலூரில் கூட்டம் முடித்து நள்ளிரவு திரும்பும் போது அவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. செருப்பு, பாம்பு, கற்கள் வீசப்பட்டன. அதே இடத்தில் 1972இல் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது. எதிர் நீச்சலில் வென்றவராக பெரியார் ஜொலிக்கிறார். மறைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக பெரியார் திகழ்கிறார்.

அதனைப் போற்றும் விதத்தில் 29.7.2026 மாலை கடலூரில் தந்தை பெரியார் சிலை முன்பு கழகத் தோழர்களும் நன்றி உணர்ச்சி உள்ள நண்பர்களும் திரண்டு வீர முழக்கமிட்டனர். “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் வாழ்க”
“செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும் புது வரலாறு படைத்த பெரியார் வாழ்க”
“பெரியார் உலகு மயம் உலகம் பெரியார் மயம்” காலத்தை வென்று நிற்கும் பெரியார் வாழ்க” என்பன போன்ற முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர்.

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பரித்தனர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் திமுக தேர்தல் பணி குழு செயலாளர் இள புகழேந்தி, மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி, செயலாளர் எழிலேந்தி, மாவட்ட கழகக் காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய இந்நிகழ்வில் மாநகர தலைவர் சிவக்குமார், மாநகர செயலாளர் சின்னதுரை, திராவிட மணி, வழக்குரைஞர் வனராசு மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சிவபாண்டியன், செயலாளர் லாலு பிரசாத், அமைப்பாளர் தமிழ்மாறன் , மருவாய் சேகர், வடலூர் மோகன், சி .என். பாளையம் சுகுமாறன், எழிலரசன், லோகநாதன், சாத்திப்பட்டு கந்தசாமி, மணகுப்பம் தர்மன், தமிழ்மாறன், நா. அழகிரி,வடக்குத்து இந்திரா நகர் நூலகர் கண்ணன், தமிழரசன் பழ. ஆறுமுகம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *