பெங்களூரு, ஜூலை 30– கருநாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு எச்.அய்.வி (HIV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநிலத்திலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் உடனடியாக எச்.அய்.வி பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை முகாம்களை நடத்துமாறு கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கருநாடகா முழுவதும் தற்போது சுமார் 2.60 லட்சம் பேர் எச்.அய்.வி பாதிப்புடன் வாழ்ந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
