திருச்சி, ஜூலை 30–- 12ஆம் வகுப்பு மாணவி மு.காருண்யா மற்றும் 9ஆம் வகுப்பு மாணவி கே.முத்துநந்தனா ஆகிய இருவரும் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஒலியாம்பியாடில் பங்குபெற்று சான்றிதழும் பதக்கங்களும் பெற்றனர். அதனைத் தொடர்ந்து 9ஆம் வகுப்பு மாணவி கே.முத்துநந்தனா உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கமும் சான்றிதழும் வென்றார்.
7ஆம் வகுப்பு மாணவி ஆர்.ஏ.பி சிபானி ராஜி திருச்சி மாவட்ட அளவிலான ரோல் பால் போட்டியில் பங்குபெற்று தங்கப்பதக்கமும் சான்றிதழும் வென்றார்.
12ஆம் வகுப்பு மாணவி ஜெ.சிறீஷா திருச்சி மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் தனிப்பிரிவில் தங்கப்பதக்கமும், சண்டைப்பிரிவில் தங்கப்பதக்கமும் சான்றிதழும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
