வினாத்தாள் கசிவுகளின் தலைநகரமா குஜராத்? ஆயுர்வேதப் பல்கலைக்கழக முறைகேட்டால் சீர்குலையும் தேர்வு முறை!

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ஜாம்நகர், ஜூலை  29 குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் (ஜாம்நகர்) அண்மையில் நடைபெறவிருந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ள நிகழ்வு, அம்மாநிலத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஏதோ ஒரு தனிப்பட்ட மோசடி அல்ல; மாறாக, கடந்த பத்து ஆண்டுகளில் குஜராத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு கலாச்சாரத்தின் மற்றொரு மோசடியின் நீட்சியாக உள்ளது

வினாத்தாள் கசிந்து
மீண்டும் சர்ச்சை!

நீட் தேர்வு சர்ச்சையைத் தொடர்ந்து, குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற ஆயுர்வேத பல்கலைக் ழகத்திலும் தேர்வு வினாத்தாள் வாட்ஸ்–அப்பில் பரவி மீண்டும் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

மோடி அரசு விரைவு நீதிமன்றம், புதிய மசோதா, தேர்வு சீர்திருத்தக் குழு என்று ஜூம்லா காட்டிவரும் நிலையி, மோசடியாளர்கள் வினாத்தாளை வாட்ஸ்– அப்பில் பகிர்ந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைந்துள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில், பி.ஏ.எம்.எஸ். படிப்பிற்கான மூன்றாம் ஆண்டு ‘சல்ய தந்திரா-1’ பாடப்பிரிவுத் தேர்வு கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்றது.

தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே, அத்தேர்வு தொடர்பான முக்கியமான வினாக்கள் வாட்ஸ்–அப் தளத்தில் சிலருக்குப் பகிரப்பட்டுள்ளன.

மேலும், தேர்வில் கேட்கப்பட்ட 12 வினாக்களில் 11 வினாக்கள் வாட்ஸ்–அப்பில் பரவிய தகவல்களோடு ஒத்துப்போயிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இது குறித்துப் பேசிய பல்கலைக் கழகத்தின் தேர்வுப் பிரிவு பொறுப்பு இயக்குநர் எச்.பி. ஜாலா, ‘‘காலை நேரத்தில் தேர்வு வழக்கம்போல் அமைதியாக நடைபெற்றது. ஆனால், மாலையில் தான் வினாக்கள் வாட்ஸ்–அப்பில் பரவிய செய்தி எங்களது கவனத்திற்கு வந்தது. உடனடியாகத் துணைவேந்தருடன் கலந்தாலோசித்து, இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்கள்
கோரிக்கை

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற னர். இதற்கிடையே, பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் 20 முதல் 25 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மற்ற பாடத் தேர்வு கள் அட்டவணைப்படி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ்
குற்றச்சாட்டு

இந்த மோசடி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூகவலைதளப் பதிவில் குஜரத்தை மய்யமாக கொண்டு இந்தியா முழுவதும் வினாத்தாள் மோசடி நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்

அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 2014 முதல் 2024 வரையி லான 10 ஆண்டுகளில் மட்டும் குஜ ராத்தில் சுமார் 34 அரசுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளன.

2014: ஜி.பி.எஸ்.சி. தலைமை அதிகாரி தேர்வு

2015 மற்றும் 2016: தலாத்தி தேர்வு

2018: ஆசிரியர் தகுதித் தேர்வு, முதன்மை சேவிகா, நாயப் சிட்னிஸ் லோக்ரக்ஷக் தல் தேர்வுகள்

2019: தலைமைச் செயலகம் சாரா எழுத்தர்  தேர்வு

2021: தலைமை எழுத்தர், மின்சார உதவிப் பொறியாளர், துணைத் தணிக்கை யாளர் தேர்வுகள்

2022: வனக் காவலர்  தேர்வு

2023: இளநிலை எழுத்தர் தேர்வு

2024 இல் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய உத்தரப் பிரதேச காவலர் தேர்வு வினாத்தாளை மோசடியாகப் பெற்று அதை விலைக்கு விற்றது அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அம்பலமானது.

இவை மூலம், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் ‘‘இந்தியாவின் வினாத்தாள் கசிவுகளின் தலைநகரமாக’’ மாறியுள்ளது என்பது உறுதியாகின்றது.

இத்தகைய அமைப்பு ரீதியான ஊழல்களுக்கு மோடி அரசின் விரைவு நீதிமன்றங்கள் (courts) மட்டும் தீர்வாகிவிட முடியாது என்றும், அது  திசைதிருப்பி மக்களைக்குழப்பும் முயற்சியே என்றும் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நமது தேர்வு மற்றும் கல்வி முறையை முழுமையாகச் சீரமைப்பது குறித்து நேர்மையான ஆழமான நடவடிக்கையைத் தொடங்க வேண்டியது தற்போதைய அவசர தேவையாகும்’’  என்று அப்பதிவில் அவர் கூறியுள்ளார்

நீட் தேர்வு விவகாரத்தைத் தொடர்ந்து, தற்பொழுது ஆயுர்வேத மருத்துவத் தேர்விலும் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள சந்தேகம் மாநிலத்தின் தேர்வு அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பி யுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை எப்போது வரும், அதில் உண்மைக்குற்றவாளிகள் பற்றிய விவரம் வருமா என்ற கேள்வி எழும்பி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *