கோல் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனத்தின் ஒரு மினி ரத்னா நிறுவனமான நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டின் (என்சிஎல்) மத்தியப் பிரதேசம் மாநிலம் சிங்க்ராலி மாவட்டம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுரங்கங்கள் அல்லது நிறுவனங்களில் ‘மைனிங்கி சித்தார் குரூப் சி மற்றும் சர்வேயர்(மைனிங்) குரூப் பி’ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சத் தகுதிகளைக் கொண்ட இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 259
பதவி: மைனிங் சர்தார், சர்வேயர் டி அண்ட் எஸ் கிரேடு – பி (மைனிங்)
தகுதி: 10ஆம் வகுப்பு, மைனிங் என்ஜினீயரிங் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு, மைனிங் சர்தார்ஷிப், சர்வேயர் தகுதிச்சான்றிதழ் உள்ளிட்ட பதவிக்கு தேவையான சான்றிதழ் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 5.8.2026 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nclcil.in என்ற இணையதளத்தின் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.8.2026
