நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனம் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம்.

இந்நிறுவனம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டு லாபகரமாக இயங்கி வரும் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆர்வமுள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டென்ட்

மொத்த காலியிடங்கள்: 500

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: தமிழ்நாடு 49, மகாராட்டிரம் 57, மேற்கு வங்கம் 46, ராஜஸ்தான் 36, கேரளம் 35, கருநாடகம் 30, உத்தரப்பிரதேசம் 24, டில்லி 20, மத்தியப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கரில் தலா 18, , குஜராத் 34, ஒடிசா 16, ஆந்திரம் 14, தெலங்கானா 15, பீகார் 14, ஜார்க்கண்ட், பஞ்சாப் தலா 10, உத்தரகாண்ட் 8, நாகாலாந்து, சிக்கிம் தலா 1, அருணாச்சலப் பிரதேசம் 5, அரியானா 3, கோவா, ஹிமாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுரா தலா 2.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரரின் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் நன்றாக எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு மற்றும் தளர்வுகள்: 1.7.2026 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.1996-க்கு முன்பாகவோ அல்லது 1.7.2005-க்கு பிறகோ பிறந்திருக்கக் கூடாது.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஊதியம்: மாதம் ரூ.63,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்ட இணைய வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. கட்டணத்தை இணைய வழியின் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://nationalinsurance.nic.co.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.8.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *