தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் வல்லுநர் குழு அரசாணை வெளியீடு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 28- மாநிலத்தின் வரு வாயை பெருக்குவதற் காக பொருளாதார வல்லுநர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய் மேம்பாட்டுக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசாணை: மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிக்கவும், வருவாய் கசிவுகளைத் தடுத்து நிதி ஆதாரங்களை மேம்படுத்தவும், ஒன்றிய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் உறுப்பினர்களாக பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன், வரி கொள்கை வல்லுநர் அரவிந்த் மோடி, முன்னாள் அய்ஆர்எஸ் அலுவலர் நஜீப் ஷா, நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எம்.சுரேஷ் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவானது மாநிலத்தின் நிதித் தற்சார்பை வலுப்படுத்துதல், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல், வரி விதி முறைகளை முறையாகப் பின்பற்றுவதை மேம் படுத்துதல், வருவாய் கசிவு களைத் தடுத்தல், வரி விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் வரி விலக்குகளை முறைப்படுத்துதல், அத்துடன் புதிய மற்றும் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத வருவாய் ஆதாரங்களை கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை நிலையாக அதிகரிப்பதற்கான வழிமுறை களை மாநில அரசுக்கு 3 மாதங்களில் பரிந்துரைக்கும்.

இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை இணைச் செயலர் ராஜகோபால் சுங்கரா செயல்படுவார்.

தேவைப்பட்டால் டாஸ்மாக், பத்திரப்பதிவு, கனிம வளம், வணிக வரி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்கு தனித்தனி துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளலாம். மேலும், எந்தவொரு அரசுத் துறை அல்லது அதிகாரிகளிடம் இருந்தும் நேரடியாக ஆவணங்கள் மற்றும் தரவுகளைக் கோரும் அதிகாரமும் இக்குழுவுக்கு தரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *