புதுடில்லி, ஜூலை 27 நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை அமல் படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று (26.7.2026) இரவு வெளி யிட்ட சுய பட காட்சிப் பதிவில் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழலில், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. நமது தேர்வு நடைமுறைகள் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். அனைத்து தேர்வு நடை முறைகளிலும் தொழில் நுட்பங்களை முழுமை யாகப் பயன்படுத்த வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டு, உலக அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலை மையில் உயர்நிலைக் குழு அமைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத் தங்களை அமல்படுத்துவது குறித்து இக்குழு ஆய்வு செய்யும். குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக் கைகள் விரைந்து மேற் கொள்ளப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரி வித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி (71), ஆதார் ஆணையத்தின் முதல் தலைவராகப் பணி யாற்றியவர். அவரது வழி காட்டுதலின் படியே தற்போது குடிமக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இ-கேஒய்சி மற்றும் யுபிஅய் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஆகியவற் றுக்கும் நந்தன் நிலேகனி மிக முக்கிய பங்களிப்பை வழங்கி உள்ளார்.
அவரது தலைமையி லான உயர்நிலைக் குழுவில் இஸ்ரோ முன் னாள் தலைவர் சோம்நாத், இந்திய உளவுத் துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை அய்அய்டி இயக்குநர் வீ.காமகோடி, கல்வித் துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால், ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அம்ரித் லால் மீனா உள் ளிட்டோர் இடம் பெற உள்ளனர்.
