கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்போக்கு அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் ஜூலை 26 கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. போராட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கழகத் தோழர்கள், தி.க செந்தில்நாதன், கிருஷ்ணமூர்த்தி, திராவிடமணி, மகளிரணி தோழர்கள் திலகமணி, கவிதா, முத்துமணி, தருமன், சிவகுமார், இர.கணேசன், வெற்றிச்செல்வன், அ.உத்ராபதி, லூகாஸ் பீட்டர், ஆனைகட்டி சம்பத், மற்றும் ப.க தரும வீரமணி, அ.மு.ராஜா மற்றும் முற்போக்கு அமைப்புக்களின் முன்னனி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
