தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதைத் தவிர்த்து தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் நீதித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

சென்னை, ஜூலை 26- மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதை தவிர்த்து அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட நீதித் துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுருக்கெழுத்தர், தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள் பணிநிரந்தரம் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம வாய்ப்பு உரிமையை நீர்த்துப்போகச் செய்தால் சட்டவிரோத, முறைகேடான மற்றும் பின்வாசல் நியமனங்களை ஊக்குவித்தது போல் ஆகிவிடும். படித்த விண்ணப்பதாரர்களின் உரிமைகள் பாதிக்கப்படும்.

தற்காலிக நியமனம் தான் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு, அதை ஏற்றுக்கொண்டு பணியில் சேர்ந்த நிலையில் தற்போது பணி நிரந்தரம் கோர முடியாது. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்தந்த பணிகளுக்கான தேர்வு நடைமுறையில் பங்கேற்க அனுமதி அளிக்கலாம். கால வரம்பில்லாமல் தற்காலிக நியமனங்களை தொடர அனுமதிக்க முடியாது என்பதால் தற்காலிக நியமனங்களை தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடைமுறைகளை நீதித்துறை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *