‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) போராட்டத்தில் ஊடுருவி கலகம் விளைவிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 25 நீட்  வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டில்லி, சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து பெரு நகரங்களில் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அது குறித்து கருத்து கேட்பதற்காக முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று கொல்கத்தா நகரில் நடந்த போராட்டத்தின் போது  நான்கு ‘மாணவர்களை’ நேர்காணல் செய்தது.

பிரதமருக்கு ஆதரவாகப் பேச்சு – எழுந்த சந்தேகம்!

அந்த நேர்காணலில் பேசிய நான்கு மாணவர்களும், போராட்டத்தின் பின்ன ணியில் உள்ள நியாயமான கோரிக்கை களைப் பேசாமல், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளைப் புகழ்ந்து பேசியுள்ளனர். மேலும், எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த அவர்கள், ‘சிஜேபி’ அமைப்பிற்கு வெளிநாடுகளிலிருந்தும், குறிப்பாக சீனாவிலிருந்தும் நிதி உதவி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

கொல்கத்தாவில் நடந்த மாணவர் போராட்டக் களத்தில் ஊடகங்களிடம் இவர்கள் பேசிய விதம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களின் பின்னணி குறித்த தகவல்கள் வெளி
யாகின.

அம்பலமான உண்மைகள்: பேசியவர்கள் யார்?

நேர்காணலில் பங்கேற்றவர்கள் ‘சாதாரண பொது மாணவர்கள்’ அல்ல என்பதும், அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த தீவிர நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது:

ஊடகத்தினர் முதலில் பேட்டி காணப்பட்டவர், ஏ.பி.வி.பி. அமைப்பின் மாநகரப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிப்பவர்.

பேட்டியளித்த எஞ்சிய மூன்று நபர்க ளும் ஏ.பி.வி.பி. அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள். தீவிர செயல்பாட்டிலும் உள்ளவர்கள்.

அரசியல் சார்புடைய ஓர் அமைப்பின் நிர்வாகிகளை, போராட்டத்தில் பங்கேற்ற சாதாரணப் பொது மாணவர்கள் போலச் சித்தரித்து பேட்டி வெளியிட்டது, பொது மக்களையும் பார்வையாளர்களையும் தவறாக வழிநடத்தும் செயல் எனச் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக சில செய்தி நிறுவனங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.

அய்.ஏ.என்.எஸ். (IANS) செய்தி நிறுவ னத்தை அதானி குழுமம் வாங்கியதைத் தொடர்ந்து, அந்நிறுவனமும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகளுக்கு ஆதரவான செய்திகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாகச் சமூக வலை தளங்களில் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

மாணவர்களின் உண்மையான போராட்ட வீரியத்தைக் குறைக்கவும், போராட்ட திசையைத் திருப்பவும் திட்ட மிட்டு இத்தகைய நேர்காணல்கள் ஒருங்கி ணைக்கப்படுவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாறே, அமைதியான போராட்டத்தில் ஊடுருவி வன்முறையைத் தூண்டி
திசை திருப்புவதுதான்!

இதோ சான்று:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாறே மக்கள் எழுச்சியை திசை திருப்பும் நோக்கத்தில் தான் அமைந்தது. விடு தலைக்காக நாடு முழுவதும் மக்கள் போராடிக்கொண்டு இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஸ்டாலி னின் ஊத்தரவின் பேரில் பிரிட்டிஷ் இந்தியாவில் ஊடுவியுள்ளனர் என்று கூறிக் குழப்பத்தை விளைவித்தனர்.

1922 ஆம் ஆண்டு நடந்த ஒத்துழை யாமை இயக்கத்தின் போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டதால் ஆங்கிலேயக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சவுரி சவுரா என்ற பகுதியில் 30–க்கும் மேற்பட்டோர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர்

இதனால் காந்தியார் அந்த போராட்டத்தையே கைவிட கோரிக்கை விடுத்தார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மக்கள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டவர்கள்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இல்லை என்றும் எங்கள் கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். அப்படி கலந்துகொண்டவர்கள் செய்த செயலுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என்றார்கள்.இதே போன்றுதான் காந்தியைக் கொலை செய்தவர்களையும் தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் இல்லை என்று இன்றுவரை கூறி வருகிறது. ஆனால், கோட்சே சாம்பலை இன்றும் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *