புதுடில்லி, ஜூலை 24 முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள முதன்மை வழக்கை விரைந்து பட்டியலிட்டு விசாரணை நடத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உறுதி அளித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது மற்றும் மேற்பார்வைக் குழுவின் வழிமுறைகளைச் செயல்படுத்துவது தொடர்பாகக் கேரளா அரசுக்கு உத்தர விடக் கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.:
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் உமாபதி நேற்று (23.7.2026) ஒரு முக்கிய முறையீட்டை முன்வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “முல்லைப் பெரியாறு அணையில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணி களை மேற்கொள்ள முடியாமல் நிலுவையில் உள்ளது. இதற்கான அனு மதிகளைக் கேரளா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எனவே, இது தொடர்பாக நீதிமன்றத்திடமிருந்து முக்கிய உத்தரவுகளைப் பெற வேண்டிய அவசிய சூழல் நிலவுகிறது.
இந்த வழக்கு ஏற்ெகனவே விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தும், போதிய நேரமின்மை காரணமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, நிலுவையில் உள்ள இப் பிரதான வழக்கை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்” என்றார். தமிழ்நாடு அரசின் இந்த நியாயமான கோரிக் கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், “முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு விரைவில் பட்டிய லிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என உறுதியளித்தார்.
இவ்வழக்கின் விரைவு விசாரணை மூலம் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பணிகளுக்கான முட்டுக் கட்டை விரைவில் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
