குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை ஜூலை 24– இவ்வாண்டின் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

குரூப்-2 தேர்வு

ஓராண்டில் என்னென்ன பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? தேர்வு நடைபெறும் நாட்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய ஆண்டு தேர்வு கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற 6 தேர்வுகளில் 3 தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகி்ன்றன. அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்கக்கூடிய குரூப்-2, குரூப்-4 மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்) ஆகிய 3 தேர்வுகள் மட்டும் எஞ்சியுள்ளன.

குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்படவி்ல்லை என்றாலும், அரசு மற்றும் தனியார் பயிற்சி மய்யங்களில் அதற்கான பயிற்சி வகுப்புகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட உள்ள போட்டித் தேர்வுகள், காலி பணியிடங்கள் குறித்து கேட்டபோது, டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது:

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2026-ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டபடி, ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியிடப்படும்.

என்னென்ன பதவிகள், எத்தனை காலி இடங்கள் என்பன உள்ளிட்ட முழு விவரங்களும் அதில் இடம்பெறும். அரசின் பல்வேறு துறைகளில் இருந்து காலி இடங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. எனவே, எத்தனை காலி இடங்கள் என்பதை இப்போது கூறமுடியாது. தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமான மின்சார வாரியத்தில் கணிசமான காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்புவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

காலிப் பணியிடங்கள் வரப்பெற்றதும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு, குரூப்-2, குரூப்-2ஏ அல்லது குரூப்-4 தேர்வுடன் சேர்க்கப்படும். ஏற்ெகனவே திட்டமிட்டபடி, குறித்த காலத்தில் அறிவிப்பு வெளியிட்டு குறித்த தேதியில் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில்
8 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள்

‘ரஷ்யன் ஹவுஸ்’ அறிவிப்பு

சென்னை ஜூலை 24- இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில்  8 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் வழங்கப்படும் என்று ‘ரஷ்யன் ஹவுஸ்’ –அறிவித்துள்ளது.

சென்னை ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மய்யத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும். இந்தக் கல்விக் கண்காட்சியின் மூலம் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ரஷ்யாவின் முன்னணி அரசு, மாநில மற்றும் கூட்டாட்சி பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து எம்பிபிஎஸ் மற்றும் பிற உயர் கல்வி படிப்புகளுக்கான உடனடி சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) பெறும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர் களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கான புதிய விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் ஒரே வெளிநாடாக ரஷ்யா திகழ்கிறது.

இதனால், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர் களின் முதல் தேர்வாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 5,000 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்காக சுமார் 8,000 இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளதாக ‘ரஷ்யன் ஹவுஸ்’ தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *