நகையைத் திருடி விட்டு விடுதியில் தங்கி கும்மாளமிட்ட பார்ப்பன அர்ச்சகர் கைது

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

வந்தவாசி, ஜூலை 23 வந்தவாசி அருகே உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் 8 பவுன் தங்க நகையைத் திருடியதோடு, ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு விடுதியில் கும்மாள மிட்ட பார்ப்பன அர்ச்சகரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோயில்களில் நகைத் திருட்டு என்பது அசல் நகையைத் தூக்கிவிட்டுப் போலியான நகையை மாட்டி வைப்பதுதான். இதைக் கண்டுபிடித்தது விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

வந்தவாசியில் உள்ள பழைமையான பெருமாள் கோயிலில் அர்ச்சகர் பணி செய்யும் ரகுராமன் என்ற பார்ப்பன அர்ச்சகர், சிலையை அலங்காரம் செய்யும்போது 8 பவுன் தங்கத்தாலியை பஞ்ச கச்சத்தில் சுருட்டி வைத்து, மாத ஊதியத்தையும் வாங்கிக்கொண்டு ஓடிவிட்டார்.

மறுநாள் அவர் பணிக்குத் திரும்பாததால், மாற்று அர்ச்சகர் சென்று சிலையை அலங்காரம் செய்தபோது 8 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.

இதனை அடுத்து கோயில் நிர்வாகம் காவல் துறையில் புகார் அளிக்க, அவரது கைப்பேசி எண், திருவண்ணாமலையில் உள்ள விடுதி ஒன்றைக் காட்டியது. அங்கு சென்ற காவல் துறையினர் அவரை ‘மடக்கி’க் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 8 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *