‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு (திருநெல்வேலி, 19.8.2026)

சிறப்பு புத்தக சலுகைகள்

திராவிடர் கழகம்

சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினை கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் திறந்து வைத்தார். தமிழர் தலைவர் தலைமையில் ‘‘வீரவணக்கம், வீரவணக்கம் சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீரவணக்கம்’’ என முழக்கமிட்டனர்.

திராவிடர் கழகம்

 வள்ளியூர் பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் சு. வெள்ளைப்பாண்டி, துணைச்செயலாளர் இ.மோகனசுந்தர், நகர கழகச் செயலாளர் பெ.நம்பிராசன், ஆண்ட்ரூஸ் ஆகியோர் ரூ.17.500/ விழாவிற்கு நன்கொடை வழங்கினார்கள்.  அறிவாசான் தந்தைபெரியார் படத்தினை கழக காப்பாளர் சிவகளை மா.பால்ராசேந்திரம் திறந்து வைத்தார்.

திராவிடர் கழகம்

 திமுக மாநில வர்த்தகரணி இணைச்செயலாளர் ந.மாலைராஜா, சுயமரியாதைச் சுடரொளி க.மு.பிரம்மநாயகம் மகன் முத்து இருளப்பன், கழக காப்பாளர் இரா.காசி, மாநகர ப.க.தலைவர் முரசொலி முருகன், கழக காப்பாளர் சி.வேலாயுதம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.  மாமன்ற உறுப்பினர் உலகநாதன் தமிழர் தலைவருக்கு சால்வை போர்த்தி சிறப்பித்தார்.

திராவிடர் கழகம்

 திருநெல்வேலியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 80ஆவது முறையாக விடுதலை நாளிதலுக்கான சந்தா தொகை 20 ஆயிரத்தை திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்ரமணியம், மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் ஆகியோர் வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ச. நல்லபெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமாரதாஸ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை, தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்சு, கழகத் தோழர்கள் தலக்குளம் பால்மணி, கோட்டாறு ச.ச. சத்யாராணி மற்றும் பலர் பங்கேற்றனர்.  ராஜபாளையத்திற்கு இரவு 12 மணி அளவில் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இல. திருப்பதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளர் முத்தரசன் ராஜபாளையம், நகர தலைவர் சிவக்குமார், நகரச் செயலாளர் பாண்டி முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மனோகரன், இளைஞரணி தோழர் இளம்பொறையன், கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், உரத்தநாடு குணசேகரன் ஆகியோர் உடன் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *