பத்ரிநாத் கோயிலில் காணிக்கைத் திருட்டு முன்னாள் அதிகாரி உட்பட இருவர் கைது!

1 Min Read

டேராடூன், ஜூலை 18 உத்தாரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தின் இமயமலை பகுதியில் 10,279 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில், காணிக்கைப் பணம் திருடப்பட்ட வழக்கில் கோயிலின் முன்னாள் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரகசிய புகாரும்
சிசிடிவி கண்காணிப்பும்

ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் நவம்பர் வரை திறந்திருக்கும் இக்கோயிலுக்கு, சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை பணம் திருடப்படுவதாக பைரவ் சேனா சங்கம் சார்பில் காவல் துறையில் ரகசியமாக புகார் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில், கடந்த ஜூன் 25-ஆம் தேதி காணிக்கை எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அப்போது, கோயில் ஊழியரான பிரமோத் நவுடியால் என்பவர் காணிக்கை பணத்தை திருடுவது  கண்டுபிடிக்கப்பட்டது இதுதொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 12-ஆம் தேதி பிரமோத் நவுடியாலை சிறப்புக் குழுவினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தத் திருட்டு சம்பவத்தில் அவருடன் இணைந்து செயல்பட்ட கோயிலின் முன்னாள் அதிகாரி ராஜேந்திர சவுகான் என்பவரும் நேற்று (17.7.2026) கைது செய்யப்பட்டார்.

“இந்த வழக்கில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில ஊழியர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளதால், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.”

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *