குமரி மாவட்ட கழக சார்பில் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் நாகர்கோயில் மாநகர் முழுவதும் 15.7.2026 அன்று நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் ம. தயாளன் பொதுக்குழு உறுப்பினர் மு. ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ். அலெக்சாண்டர், சி.அய்சக் நியூட்டன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு கழக கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் டாக்டர் பி.கலைச்செல்வன் கோட்டார் பகுதி கழகத் தலைவர் ச.ச.மணிமேகலை திராவிடர் கழக இலக்கிய அணிச் செயலாளர் பா.பொன்னு ராஜன் கன்னியாகுமரி நகரச் செயலாளர் க.யுவான்ஸ், கழக வடசேரி பகுதித் தலைவர் பா.சு.முத்து வைரவன் கழகத் தோழர்கள்
ஞா.பிரான்சிஸ், மு.குமரிசெல்வன், பெனடிக்ட் மற்றும் பலரும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தந்தை பெரியார் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் எழுதிய நூல்கள், பகுத்தறிவு துண்டறிக்கைகள் வழங்கினர் பொதுமக்களும் ஆர்வமுடன் கருத்தூன்றிப் படித்தனர்.
குமரி மாவட்ட கழக சார்பில் பகுத்தறிவு விழிப்புணர்வுப் பிரச்சாரம்
Leave a Comment
